நாடகக் காவலரின் அன்றைய தோற்றம்!

அருமை நிழல்:

பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாகவே அறியப்பட்டவர் நடிகர் ஆர்.எஸ்.மனோகர். பல குணச்சித்திர வேடங்களையும் ஏற்றிருக்கிற இவருக்குப் பிடித்தமானது நாடகம்.

புராண நாடகங்களை மேடைகளில் பிரமிக்கத்தக்க காட்சிகளுடன் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தியவர். ராவணேஸ்வரன் போன்ற இவருடைய தனித்துவமான நாடகங்களில் கதாநாயகனாகப் பெயர் பெற்ற மனோகரின் துவக்க காலப் புகைப்படம் இது.

நன்றி: பேசும் படம்

You might also like