இசையால் இளசுகளின் மனசை படபடக்க வைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!

இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த டாப் 15 பாடல்களை குறிக்கும் ஒரு தொகுப்பு.

மின்சார கனவு – வெண்ணிலாவே

ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம் மின்சார கனவு. இப்படத்தினை தயாரிப்பாளர் சரவணன் தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

காதல் தேசம் – என்னை காணவில்லையே

இயக்குநர் கதிர் இயக்கத்தில் வினீத், அப்பாஸ், தபு நடித்திருக்கும் திரைப்படம் காதல் தேசம். இப்படத்தினை தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அலைபாயுதே – சிநேகிதனே சிநேகிதனே

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், மாதவன், ஷாலினி நடித்த காதல் திரைப்படம் அலைபாயுதே.  இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சங்கமம் – மழை துளி

சங்கமம் (1999) சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஏ. ஆர். ரகுமான் நாயகனாக நடித்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கன்னத்தில் முத்தமிட்டாள் – ஒரு தெய்வம் தந்த பூவே

மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ், ஜெ டி, பிரகாஷ் ராஜ், கீர்த்தனா பார்த்திபன் மற்றும் பசுபதி நடித்த திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டாள்.

இந்தப் படத்தில் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துக் கூறியுள்ளார் இயக்குநர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

எந்திரன் – அரிமா அரிமா

எந்திரன். 2010ல் வெளியான தமிழ்த் திரைப்படம். சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கின்றார்கள். இப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கின்றார்.

காவியத் தலைவன் – யாருமில்லா

2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் வரலாற்று அறிவியல் திரைப்படம் காவியத் தலைவன். இந்தத் திரைப்படத்தை வசந்தபாலன் இயக்க, பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்க, நீரவ் ஷாவி ஒளிப்பதிவு செய்தார்.

காற்று வெளியிடை – நல்லை அல்லை

காற்று வெளியிடை. இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான காதல் திரைப்படம். இத்திரைப்படத்தில், நடிகர் கார்த்தி நடிக்க, வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுத, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மரியான் – நெஞ்சே எழு

மரியான். பரத் பாலா இயக்கிய திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

பத்து தல – நினைவிருக்க

இயக்குநர் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் என பல தமிழ் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம் பத்து தல. இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி) – நானே வருகிறேன்

ஒகே கண்மணி (ஓ காதல் கண்மணி) தமிழ் காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்க, துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிக்க இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

பொன்னியின் செல்வன் 2 – ஆகா நாகா

மணிரத்னம் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தொடர்ச்சி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.

இத்திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் கதையை அடிப்படையாக கொண்டு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார், மணிரத்னம். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 – தி கிண்ட்லிங்) – மல்லிபூ

வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 – தி கிண்ட்லிங்) இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ராயன் – வாட்டர் பாக்கெட்

ராயன், தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தனுஷ் தானே இயக்குனராகவும், கதாநாயகனாக பணியாற்றியுள்ள அதிரடி – திரில்லர் திரைப்படம். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை – என்னை இழுக்குதடி

காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, லால் என பல பிரபலங்கள் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நன்றி: ஃபிலிம் பீட் இதழ்

You might also like