குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவும் ராஜேஷ்குமாரின் நாவல்கள்!

க்ரைம் நாவல்களை எழுதிய ராஜேஸ்குமாரிடம் வாசகர் ஒருவர், ஒரு வார இதழுக்காக கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும்.

கேள்வி:

“நிறைய குற்றச் சம்பவங்களை எழுதியிருக்கிறீர்கள். காவல்துறையில் இருந்து ஏதேனும் குற்றத்தைக் கண்டுபிடிக்க உங்கள் உதவியை நாடியதுண்டா?”

எழுத்தாளர் ராஜேஷ்குமார் பதில்:

25 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஒரு காவல்துறை உயரதிகாரிகள் மீட்டிங்கில் ‘110 க்ரைம் நடந்திருக்கு. ஆனா பத்துதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. மத்ததெல்லாம் கிடப்புல போட்டுட்டீங்க. ராஜேஷ்குமார் நாவல்கள் படிங்க. ஒரு எழுத்தாளர் சின்னச்சின்ன தடயங்களை வெச்சு எப்படி குற்றவாளியை நெருங்கறதுன்னு எழுதறாரு… நீங்கள்லாம் அதைப் படிச்சா உங்களுக்கு நிறைய விதங்கள்ல உதவியா இருக்கும்’ என்று ஒரு பெரிய அதிகாரி பேசியிருக்கிறார். அதை இன்னொரு அதிகாரி என்னிடம் பகிர்ந்துகொண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இவையெல்லாம்தான் எனக்கு விருதுகள்!”

  • நன்றி : விகடன்
You might also like