எப்படி இருந்தால் சட்டம் ஒழுங்கு மேம்படும்?

அப்போதே பேசிய முன்னாள் டி.ஜி.பி

பரண்:

அடிக்கடி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றிய செய்திகள் அடிபடுகின்றன.

இது பற்றி தமிழக காவல்துறைத் தலைவராக, அதாவது டி.ஜி.பியாக இருந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“ஆட்சியில் இருப்பவர்கள், இன்டெலிஜென்ஸ், ஸ்பெஷல் பிராஞ்சுகளை, தம் கட்சிக்காரர்கள் மற்றும் எதிர்க் கட்சிக்காரர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும், டெலிபோன்களை ஒட்டுக் கேட்கவும், மற்ற ஒற்று வேலைகளுக்கும் பயன்படுத்துவதை நிறுத்தினாலே போதும்; சட்டம் ஒழுங்கு மேம்படும்”

– காவல்துறையில் உயர் பொறுப்பு வகித்த இவர் உச்சநீதிமன்ற நீதிபதியான வி.ஆர்.கிருஷ்ணய்யரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

You might also like