என் சாவுக்குப் பிறகு கூட நீதி கிடைக்கவில்லை எனில்…!

“என் சாவுக்குப் பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து என் உடலின் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்”

அதுல் சுபாஷின் வேதனையின் இறுதி வரிகள், கோடிக்கணக்கான இந்திய ஆண் மக்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் வரிகள்.

அதுல் சுபாஷ் பெங்களூரில் ஒரு AI Engineer, வெல் எஜுகேடட். இவர் சாவுக்குக் காரணமாக ஐந்து பேர்களை மிக ஸ்ட்ராங்கா குறிப்பிட்டுள்ளார் சுபாஷ்.

ஒரு பெண் நீதிபதி, அவரின் கணவர், நீதிபதியின் மச்சினன், மாமியார், அவரது மனைவியின் அங்கிள்.

என்னத்தான் நடந்தது!

இவருக்கும் இவர் மனைவிக்கும் பிரச்சினை, அவரின் மனைவியும், மாமியார், மச்சினன், என மொத்தக் குடும்பமும் அவரை, மிக மோசமான முறையில் கொடுமைப்படுத்தி உள்ளது.

லட்சக்கணக்கில் மனைவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அதுல் சுபாஷ் உதவியுள்ளார். எந்தளவுக்கு என்றால் மனையின் தாய், தந்தை சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்கு அவரிடம் அவர்கள் பிடுங்கியுள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் அதை அவர் நிறுத்தி விடுகிறார். கோபம் கொண்ட மனைவி, அவரிடமிருந்து விவாகரத்து பெறப் போவதாக மிரட்டி குழந்தையுடன் சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு சென்று விடுகிறார்.

அதன்பிறகு தான் அவருக்கு மன உளைச்சல் தரும் வேலைகளில் அந்த மனைவி ஈடுபடுகிறார். அவர் மீது மிக மோசமான எட்டு பொய் வழக்குகள் பதியப்படுகிறது.

கணவர் அடித்துக் கொடுமைப்படுத்துகிறார், வரதட்சணைக் கொடுமை, மாமனாரைக் கொலை செய்தார், இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவுக்கு வற்புறுத்துகிறார் என ஏகப்பட்ட பொய் வழக்குகள் பதியப்படுகின்றன.

ஒவ்வொரு வழக்கிற்கும் பல மாதங்கள் பெங்களூருக்கும் உத்திரபிரதேசத்திற்கும் அலைகிறார்.

ஒவ்வொன்றையும் பொய் என நிரூபிக்கிறார். ஆனால், இவர்கள் வழக்குப் போடுவதை நிறுத்தவில்லை.

நாற்பதுக்கும் அதிகமான முறை ஜான்பூர் நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பெண் நீதிபதியிடம் தானே வாதாடுகிறார் அதுல் சுபாஷ். மாமனார் உடல்நிலை மோசமாக இருந்தால் தான் திருமணமே விரைவாக நடத்தினார்கள். அவர் இயற்கையாக மரணித்ததைக் குழப்பிக் கொலைக் குற்றம் சாட்டினார்கள்.

இயற்கைக்கு மாறாக எந்த உடலுறவையும் கொள்ளவில்லை, அதற்கான எந்த மருத்துவ ஆதாரமும் சமர்பிக்கப்படவில்லை.

மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்தியதாக எந்தக் காயமும் ஆதாரமும் இல்லை.

வரதட்சணைக் கொடுமை செய்தேன் என்கிறார்கள், அது உண்மையில்லை. லட்சக்கணக்கில் அவர்களுக்கு நான் உதவியுள்ள ஆதாரம் தன்னிடம் உள்ளது.

என் ஒரே பிள்ளையை என் கண்ணில் காட்டாமல் நீதிமன்றத்திற்குக் கூட அழைத்து வரமால் ஏங்க வைத்து விரட்டுகிறார்கள்.

என் மீதுள்ள எல்லா வழக்குகளும் நியாயமாக விசாரித்தால் பொய் என தெரியும்.

தயவு செய்து வழக்குகளை தள்ளுப்படி செய்யுங்கள், இப்படி மனரீதியாக பிரஷ்ஷர் கொடுப்பதால் தான் பல ஆண்கள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என கண்ணீர் வடிக்கிறார் சுபாஷ்.

அதற்கு நீதிமன்றத்திலே அவரின் மனைவி அப்போ ஏன் உயிர் வாழ்கிறாய்? செத்துத் தொலைய வேண்டியது தானே எனச் சொல்கிறார்.

அதற்கு அந்த பெண் நீதிபதியும் ஆமோதிப்பது போல் சத்தமாக சிரிக்கிறார்.

பின்பு பெண் நீதிபதி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு இந்த வழக்கை எல்லாம் முடிப்பதாக டீலிங் பேசுகிறார். இல்லை எனில் வழக்கிற்காக அலைய வேண்டியது தான் என மிரட்டுகிறார்.

தான் எந்தத் தவறும் செய்யாமல், நேர்மையாக வரி கட்டி உழைத்து சேர்த்த பணத்தை, நீதி வழங்க வேண்டிய அரசு நீதிபதியும் தனது மனைவியும் அவரின் குடும்பத்தார்களும் இப்படி பேய்களாக தன்னை சூழ்ந்து பணத்திற்காக எவ்வளவு மன உளைச்சலைத் தருகிறார்களே என கவலைக்கொள்கிறார்.

மேற்கூறிய விஷயங்களை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் வீடியோ மற்றும் நாற்பது பக்கங்களுக்கு கடிதத்தை எழுதி வைத்து சுபாஷ் தற்கொலை செய்துக்கொள்கிறார்.

நீதிமன்றம் இந்திய சட்டப்படி நடந்துக்கொள்ளவில்லை என்றும், பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரதேயக சட்டங்கள் தவறாக வழி நடத்தப்படுகிறது என்றும், அப்பாவி ஆண்களுக்கு இந்த சட்டம் நீதியைப் பெற்றுத் தரவில்லை என்றும், இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றும் கூறி அவர் உயிரை விட்டுள்ளார்.

இந்தியா எங்கும் இது குறித்த விவாதங்கள் எழ தொடங்கியுள்ளன.

குடும்ப வன்முறையும் பாலியல் வன்புணர்வும் பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் நடக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் போராட உடன் பிறப்புகள் யாரும் தயாராக இல்லை என்பது கசப்பான உண்மை.

You might also like