எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்றும் நூல்!

நூல் அறிமுகம்: குற்றமும் கருணையும்!

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இளவயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் தான் குற்றமும் கருணையும்!.

நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி, சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இந்தக் கதைகள்.

சரியான அணுகுமுறை இருந்தால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்ற முடியும் என்பதற்கும் திருத்தவே முடியாது என்று கருதப்படுவோரிடத்திலும் மனமாற்றம் நிகழும் என்பதற்கும் இந்தப் புத்தகம் சிறந்த சான்றாவணம்.

காவல் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி எழுப்பும் ஆற்றல் கொண்ட நிகழ்வுகள் இவை.

******

நூல்: குற்றமும் கருணையும்!
இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள்

ஆசிரியர்: வி சுதர்ஷன்
தமிழில்: குமரேசன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ. 261/-

You might also like