“கவிதையால் ஒன்றும் செய்ய முடியாது. அது ஒரு மயக்கம். உரைநடைதான் மாற்றங்களைக் கொண்டு வரும். பெரியாரின் உரைநடைதான் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது, என்னால் மறக்கமுடியாத தலைவர் பெரியார்தான்.
பெரியாரால்தான் இங்கே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதுவரை இங்குள்ள மக்கள் நம்புபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எம்புபவர்களாக மாற்றியது பெரியார்தான்.
பெரியார் யாரையும் மேற்கோள் காட்டிப் பேசுவதில்லை. “நான் சொல்றேன்னு“தான் சொல்வார். அதுக்கு அசாத்திய தன்மையும் தன்னம்பிக்கையும் தனக்கு சரி என்று பட்டதை வெளிப்படுத்தும் பழக்கமும் வேணும். பெரியார் என்ற ஒரு வார்த்தை இவரை மட்டும்தான் குறிக்கும். உலக வரலாற்றில் இந்தப் பெருமை எந்தத் தலைவருக்கும் கிடையாது.”
- உவமைக் கவிஞர் சுரதா