ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரிடம் creative writing இருக்காது. படைப்பாளிகளில் நிறைய பேர், தத்துவப் போக்குகளை அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால் அறிஞர் ராஜ்கவுதமன் இக்கூற்றிலிருந்து விலகியவர். அவர் படைப்பாளியாக ஆய்வறிஞராக வெற்றி பெற்றவர்.
பொதுவுடமை, பின் நவீனத்துவம், தலித்தியம் போன்ற தத்துவார்த்த வெளிச்சத்தில் சங்க இலக்கியத்தை, சமகால இலக்கியத்தை மறு வாசிப்பு செய்தவர்.
ஐரோப்பியர்களின் இரண்டாயிரம் ஆண்டு தத்துவமரபுகளைக் கவிழ்த்துக் கொட்டியவர் தெரீதா. அவ்வண்ணம், தமிழில் மிகப்பெரிய எழுத்தாளுமைகளது பிரதிகளில் மறைந்திருந்த சனாதனம், சாதி நலன், போன்றவற்றை அவிழ்த்துக் காட்டியவர் ராஜ்கவுதமன்.
தான் emerge ஆக வேண்டும் என்பதற்காக தனக்கு எதிரான கருத்தியலோடு சிறிதும் சமரசம் செய்யாதவர். நிலவுடமை அறம், நீதி குறித்து அவர் எழுப்பிய கேள்விகள், பின்னால் வந்த
இளைஞர்களுக்கு, பிரதிகளை எப்படி அணுகுவது? என்பதில் தெளிவை வழங்கியது. அவர் மறையலாம். அவர் செப்பனிட்டுச் சென்ற பாதையில் நடமாட்டம் தொடர்ந்தபடி இருக்கும்.