மலேசியாவில் உள்ள சீனர்களின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். இங்குள்ள சீனர்கள் திருமணம் முடிந்தவுடன் இக்கோயிலுக்கு வந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தமிழர்களும் வெள்ளையர்களும் இந்து மதம் சார்ந்த இதர தேசத்தவர்களும் பெருமளவில் சீனர்களுக்கு நிகராக வந்து வணங்கும் திருத்தலமாகத் துலங்குகிறது இக்கோயில்.
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு விலங்கை இங்குள்ள பூங்காவில் வடிவமைத்திருக்கிறார்கள். அவற்றில் பன்றியும் பச்சோந்தியும் பாம்பும் உண்டு.
அந்தந்த ஆண்டுகளில் பிறந்தவர்கள் அந்தந்த வருடத்திற்கென வடிவமைக்கப்பட்ட விலங்குச் சிற்பங்களருகே நின்று புகைப்படமெடுத்து ஊடகத் தளங்களில் பதிவிட்டு மகிழ்கிறார்கள்.
நான் பிறந்த ஆண்டுக்கு அடையாளமாக வடிவமைக்கப்பட்ட விலங்கு காளை! ஆனாலும் பாம்போடு நின்றுதான் நான் படமெடுத்துக்கொண்டேன். விஷ ஜந்துகள் எத்தனையோ தீண்டியும் உயிரோடிருப்பவன் என்பதால்!
நன்றி: புகைப்படங்கள் உதவி – deepakmagazine.com