கொடியும் அசையவில்லை, காற்றும் அசையவில்லை, மனம்தான் அசைகிறது!

‘நேரம் என்ன?’ என்று கேட்டால் ‘நேரம் மூன்று மணி’ என்போம்.

‘நேரம் என்றால் என்ன என்று கேட்டால்?!!! – (கொஞ்சம் சிக்கல்)

நேரம் அல்லது காலம் எங்கிருந்து வந்தது? – (நேற்றில் இருந்து!?)

எங்கே போய்க் கொண்டிருக்கிறது? – (நாளையை நோக்கி!?)

காலம், எந்த திசையில் சரியாகப் போக வேண்டும் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது பாருங்கள். அதுதான் வியப்பான விடயம்.

தெர்மோ டைனமிக்சின் முதல் விதி என்ன தெரியுமா? (ப்ரோ. உங்களுக்கு என்ன ஆச்சு?)

‘வெப்பம் என்பது ஒருவகையான வேலை. வேலை என்பது ஒருவகையான வெப்பம்.’

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவியலாளர்கள் ஒன்றை கவனித்தார்கள். காலம் என்பது குளிரில் இருந்து வெப்பத்தை நோக்கிப் பாய்கிறது. ஆனால், வெப்பத்தில் இருந்து குளிரை நோக்கி அது பாய்வதில்லை.

வெதுவெதுப்பான ஒரு கோப்பை தேநீரில் இருந்து பனிக்கட்டி உருவாக முடியாது. அதேநேரம் சூடான தேநீருக்குள் பனிக்கட்டியைப் போட்டால் பனிக்கட்டி உருகி மித வெப்பமாக மாறும். அதேவேளையில் தேநீர் குளிர்ந்து விடும்.

காலம் வெப்பத்தில் இருந்து குளிரை நோக்கி போவது போல ஒவ்வொன்றும் ஒரு முடிவை நோக்கி ஓடுகின்றன.

தெர்மோ டைனமிக்சின் இந்த விதியை கவியரசு கண்ணதாசன் தெரிந்து வைத்துக்கொண்டு எவ்வளவு அருமையாக ஒரு பாட்டு எழுதியிருக்கிறார் பாருங்கள்.

‘நதி எங்கே போகிறது? கடலைத் தேடி!
நாள் எங்கே போகிறது? இரவைத் தேடி!
நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!
நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி!

கவியரசர் எழுதிய இன்னொரு பாடல், ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?’

ஆனால் ஜென் தத்துவம் என்ன சொல்கிறது, ‘கொடியும் அசையவில்லை. காற்றும் அசையவில்லை. மனம் அசைகிறது.’

நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு

You might also like