தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசின் செயல்பாடுகள்!

2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல்.

இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து ஒருதாய் மக்கள் என்ற அடிப்படையில் இயக்கும் என்பது இலங்கைவாழ் மக்களின் எண்ணமும் கூற்றுமாக இருக்கிறது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றி இலங்கை அரசியலின் ஒரு புரட்சிகரமான ஆட்சியை நிறுவுகிறது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஜனாதிபதியின் வாகனம், தொடரணி எதுவும் இல்லாமல் பயணிப்பதும், சாதாரண மக்களின் இயல்பு போலவே வீதி சமிக்ஞைகளுக்கு மதிப்பளித்து நின்று நகர்ந்து போவதும் முதல்முறையாக நடக்கிறது. இது சாதாரன மக்கள் மனதில் நெகிழ்வை எற்படுத்துகிறது.

மேலும் இந்த செயல் சட்ட விதிமுறைகளை அரசங்கமே மதிப்பளித்து செயல்படுவது மக்கள் மனதில் மரியதையையும், நம்பிக்கையையும் உருவக்குகிறது.

இதுவரை காலமும் இருந்துவந்த இன, மத முறன்பாடுகளைக் கடந்து மூவின மக்களும் ஒன்றிணைந்து வாக்களித்து தமது வாக்குகளை ”தேசிய மக்கள் சக்தி” கட்சிக்கு வழங்கி ஓரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டார்கள் என்பது இலங்கை அரசியால் வரலாற்றில் முதல் திருப்புமுனையாகும்.

2024 பொதுத்தேர்தல் இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி நிலையாட்டிய சாதனைகள் ஒரு பார்வை:

🔹 2024 பொதுத் தேர்தல், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித் தந்துள்ளது. அதன்படி, இந்நாட்டின் வரலாற்றில் பொதுத் தேர்தல் ஒன்றில் கட்சி ஒன்று பெற்ற அதிகூடிய வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பதிவு செய்துள்ளது.

அதன்படி, 2024 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர், இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளாக 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற 6,853,690 வாக்குகளின் சாதனையை முறியடித்து தேசிய மக்கள் சக்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

🔹அதேபோல், பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிக வாக்கு சதவீதம் 61.56% ஆக பதிவாகியிருந்தது.
இதற்கு முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 60.33% வாக்குகளைப் பெற்றிருந்தது.

🔹மேலும், பொதுத் தேர்தல் ஒன்றில் அதிக மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த 21 தேர்தல் மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 19 மாவட்டங்களில் வெற்றிப் பெற்று சாதனை படைத்திருந்தது.

🔹இந்த பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற சாதனையையும் தேசிய மக்கள் சக்தி படைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி 152 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. முன்னதாக 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 136 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.

🔹பொதுத் தேர்தலில் அதிக தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற சாதனையைும் தேசிய மக்கள் சக்தி நிகழ்த்தியுள்ளது.

2020 இல் பொதுஜன பெரமுன பெற்ற 17 தேசிய பட்டியல் ஆசனங்களின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி 18 தேசிய பட்டியல் ஆசனங்களை சொந்தமாக்கியது.

🔹பொதுத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களைப் பெற முடிந்தது.

இதற்கு முன்னர் 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது.

🔹விகிதாசார முறையின் கீழ் பாராளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களை தனியொரு கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவியேற்ற முதல் 50 நாட்களுக்குள் செய்த கொள்கை மாற்றங்கள், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துதல், வெளிநாட்டு உறவுகள், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய நியமனங்கள் ஆகியவற்றின் விரிவான சுருக்கம் இங்கே உள்ளது. அனைத்து விவரங்களும் செய்தி ஆதாரங்களுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.*

கொள்கை மாற்றங்கள்:

1. ஜனாதிபதியின் பதவியேற்பு விழா எளிமையான, குறைந்த செலவில் நடந்த நிகழ்ச்சி.

2. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட பல வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் பொது சேவைக்கு திரும்பியுள்ளனர்.

3. “சுத்தமான ஸ்ரீலங்கா” திட்டம், நாடு முழுவதும் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தும் முயற்சி, ஜனாதிபதியின் தலைமையில் தொடங்கப்பட்டது.

4. விஐபி பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட 2,000 கூடுதல் போலீஸ் அதிகாரிகள் வழக்கமான போலீஸ் பணிகளுக்கு மீண்டும் ஈடுபடுத்தப்பட்டனர்.

5. வெளிநாடுகளில் ராஜதந்திர பதவிகளில் உள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் திரும்ப அழைக்கப்பட்டு, தகுதியான அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

6. 30 வருடங்களாக மூடப்பட்டிருந்த பலாலி – அச்சுவேலி வீதி மீண்டும் திறக்கப்பட்டதுடன், அலரிமாளிகையைச் சுற்றியுள்ள வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டன.

7. அரசு பள்ளி நிகழ்ச்சிகளுக்கு பெற்றோரிடம் நிதி வசூலிப்பது தடை செய்யப்பட்டது.

8. புதிய ஜனாதிபதி ஆலோசகர்கள் சம்பளம் இல்லாமல் சேவை செய்ய முன்வந்தனர்.

9. முதன்முறையாக, மாற்றுத்திறனாளி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியப் பட்டியலிலிருந்து பார்வையற்ற ஒருவர் நியமிக்கப்பட்டார்

மேலும் அந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தோட்டத் துறையைச் சேர்ந்த NPP வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

10. கடந்த பாராளுமன்றத்தில் செல்வாக்குப் பெறாத ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தனர்.

மேலும் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அம்பாந்தோட்டையில் போட்டியிடவில்லை. சட்டம் மற்றும் ஒழுங்கை செயல்படுத்துதல்,

1. அமைச்சர்கள் தங்கள் உத்தியோகபூர்வ வாகனங்களை திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதியின் உத்தரவுக்கு உடனடி பதில் கிடைத்தது, அவர்கள் திரும்பியபோது சொகுசு கார்கள் காலி முகத்திடலில் குவிந்தன.

2. உத்தியோகபூர்வ இல்லங்களை ஆக்கிரமித்துள்ள முன்னாள் அமைச்சர்களை காலி செய்ய உத்தரவுக்கு உடனடி பதில்.

3. செலுத்தப்படாத மின்சாரம் பயன்பாட்டு பில்களைக் கொண்ட முன்னாள் அமைச்சர்களுக்கு அவற்றைத் தீர்க்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இன்னும் பலவாறான புதிய புரட்சிகரமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி இந்த அரசு மக்களுக்கு சேவை செய்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களின் சக்தியின் பலத்தை நிரூபித்து விட்டார்கள்.

இந்த ஆட்சியால் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படுகிறது என்பது அரசின் மீது மதிப்பும் மரியாதையையும் நம்பிக்கையையும் மக்கள் மனதில் துளிர்விட்டிருக்கிறது.

– தனுஷா

#இலங்கை #நாடாளுமன்ற_தேர்தல் #அதிபர்_அனுரா #இலங்கை #srilanka #இலங்கை_நாடாளுமன்றத்_தேர்தல் #இலங்கை_அதிபர் #srilanka_Parliament_election #srilanka_president #Anura_Kumara #Dissanayake #அநுரா_குமாரா #திஸநாயக்கா

You might also like