இழந்த மழையின் அற்புதம்!

வாசிப்பின் ருசி:
*

“மூன்று நாட்களாக மழை விடாது பெய்து கொண்டிருக்கிறது. ஊர்வாசிகளுக்கு மழை தரும் ஒரே செய்தி ‘அசௌகரியம்’ என்பது தான். விரோத பாவம் கொள்கிறார்கள்.

மூக்குப்பொடி வாங்கக் குந்தகமாக இருக்கிறது என்று தூற்றுகிறார்கள். மழையின் அற்புதத்தை முற்றாக இழந்து விட்டோம்.

எனக்கும் மழைக்குமுள்ள உறவு கூடச் சீரானது அல்ல தான். என்னை மறந்து அதைப் பார்க்க எனக்குத் தெரியவில்லை.

மழையில், மழையை ரசிக்காதவர்களின் கோபத்தைப் பார்ப்பது, மழையைப் பார்ப்பது அல்ல. மழையைப் பார்க்க எனக்குத் தெரிய வேண்டும்.

தெரிய வேண்டும் என்று சொல்வது கூடச் சரியில்லை. கூட வேண்டும். நிச்சயமாகக் கூடும். பார்க்கத் தெரிந்துவிட்டால் கிடைக்க வேண்டியது, அதன்பின் எதுவும் இல்லை.”

– காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நாவலில் இருந்து ஒரு பகுதி.

You might also like