கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று முன்மொழியப்பட்டது.
இந்நிலையில் இந்த மசோதா மீது தற்போது கொலம்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதிக வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பிக்கள் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இதில் கையெழுத்திட்ட பின்னர் மசோதா சட்டமாக்கப்பட்டும். இதன்மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வரவேற்றுப் பேசிய காங்கிரசை சேர்ந்த கிளாரா ஒப்ரிகான், “அவர்கள் பாலியல் பொருட்கள் அல்ல, அவர்கள் சிறுமிகள்” என்று தெரிவித்தார்.