செய்தி:
சென்னை முகப்பேரில் போதை மாத்திரைகள் விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது. – செல்போன் செயலி மூலம் சப்ளை செய்தது அம்பலம்!
கோவிந்த் கமெண்ட்:
ஒரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்து உருக்கமான வேண்டுகோளை ஊடகங்கள் வழியாக விடுக்கிறார். மற்றொருபுறம் போதை வஸ்துகள் பரவலாக விநியோகம் ஆவதும் நடந்து கொண்டிருக்கிறது. சிலர் குடிசைத் தொழில் மாதிரியே இவற்றை தயாரிப்பதும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அதன் தொடர்ச்சியாகத் தான் போதை மாத்திரைகள் விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எப்படிப்பட்ட போதை மயமான இளைய சமுதாயத்தை நாம் நிகழ்காலத்தில் சந்திக்க வேண்டி இருக்கிறது.