நூல் அறிமுகம்: துயிலின் இரு நிலங்கள்!
இத்தனை பெரிய எண்ணிக்கையில் பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு ஒரே தொகுப்பாகத் தமிழில் வெளிவருவது இது முதல் தடவை.
தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் உலகக் கவிஞர்களின் படைப்புகள் வெளியாவதும் அவ்வப்போது அவற்றில் சில தொகுக்கப்படுவதும் மொழிபெயர்ப்பாளர்கள் சிலரின் முயற்சியாகத் தனித் தொகுப்புகள் வெளியாவதும் உருவாகியுள்ள மரபுக்கு இத்தொகுப்பு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.
இந்தியக் கவிஞர் கபீருடையவை உள்ளிட்டு பாரசீக, சீன, ரஷ்ய, அமெரிக்க, பிரிட்டிஷ், பெரெஞ்ச் இன்ன பிற கவிஞர்கள் பலரின் கவிதைகளும் இதில் உள்ளன.
உலகக் கவிதையின் ஒரு குறிப்பிட்ட மொழிதல் முறையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இதில் பதிவாகியுள்ளது.
எஸ்.சண்முகம் தேர்ந்துகொண்ட கருவும் அவர் கையாளும் மொழிநடையும் யாரையும் வசிகரிக்கும்.
காதலும் இயற்கையும் நம் தமிழ் மரபின் பிரதான உயிர்ச் சத்துகளில் ஒன்றான அகப்பாடல்களில் ஊடாடி நிற்பதே இம்மொழிபெயர்ப்புக் கவிதைகளின் ஈர்ப்புக்குக் காரணம்.
*****
நூல்: துயிலின் இரு நிலங்கள்
தமிழில்: எஸ்.சண்முகம்
தோழமை பதிப்பகம்
பக்கங்கள்: 400
விலை: ₹342/-