செய்தி:
ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் ரூ.6,800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் அங்கம் வைத்து ஆட்சியைத் தாக்குப் பிடிக்கும் கட்சியில் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ரயில்வே திட்டங்களில் சிறப்பு ஒதுக்கீடு எப்படியோ செய்யப்பட்ட வருகிறது.
ஆனால், மற்ற மாநிலங்களின் கதி என்ன? குறிப்பாக தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து குரல் கொடுத்தும் இதுவரை உரிய நிதி உரிய நேரத்தில் வழங்கப்படவில்லையே.
ஒரே நாடு என்ற கொள்கையை மட்டும் அடிக்கடி பேசும் மத்திய அரசு, இந்த விதமான நிதி ஒதுக்கீட்டில் மட்டும் ஏன் தேசியக் கொள்கையை செயல்படுத்துவதில்லை?