கோவில்களில் வழிபடுவதில் கூட பாரபட்சமா?

செய்தி:

கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால், ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறது.

கோவிந்த் கமெண்ட்:

மதுரை உயர்நீதிமன்றக் கிளை எழுப்பியிருக்கிற கேள்வி ரொம்பவும் நியாயமானதுதான். சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்கிற மாதிரி, இறை பக்திக்கு முன்னாலும் எல்லோரும் சமம் தானே?

ஆனால், நடைமுறையில் உள்ள எதார்த்தம் எப்படி இருக்கிறது? பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் கோயில்களில் சிறப்புக் கட்டணமோ அல்லது சிறப்பு சலுகையோ அளிக்கப்பட்டு அவர்கள் கோவில் கருவறைக்கு அருகில் கூட அனுமதிக்கப்படுகிறார்கள்.

மற்ற சாதாரண பக்தர்கள் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறார்கள். அதுவும் விரைவாகச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதுதான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆந்திரா உள்ளிட்ட சகல கோவில்களிலும் தற்போது நீடித்து வரும் நடைமுறை.

பக்தியிலும் ஒரு சமத்துவப் பார்வையை யார் உருவாக்குவார்கள்? யார் உருவாக்க ஒத்துழைப்பார்கள்?

You might also like