சேபியன்ஸ்: அனைவரும் படிக்கவேண்டிய நூல்!

சேபியன்ஸ்: நூல் அறிமுகம்

யூவல் நோவா ஹராரியின் (Yual Noah Harari) சேபியன்ஸ் (Sapiens) புத்தகம் தற்போது கிராபிக் நாவல் வடிவில் கிடைக்கிறது. ஐந்து பாகங்களாக வெளியிடுகிறார்கள். இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்துள்ளன.

கிராபிக் புத்தகத்தில் நோவா முக்கியக் கதாபாத்திரமாகவும் ஜோயி என்ற குட்டிப் பெண்ணும் தோன்றுகிறார்கள்.

இவர்கள் இருவரோடும் அளவளாவி ஜோயிக்குப் புரியும் வகையில் கருத்துகளை விளக்குவதற்காகத் துறை வல்லுனர்களும் கதாபாத்திரங்களாகத் தோன்றுகிறார்கள்.

வாசகர்களின் கவனத்தை ஈர்த்துத் தக்கவைக்கவும் அலுப்புத் தட்டாமல் இருக்கவும் புத்தகம் நெடுக பல புதிய உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கதைக்கு நடுவே பத்திரிகை தொலைக்காட்சி விளம்பரங்கள், ஆவணப்படம், கல்லூரி விரிவுரை, தொலைக்காட்சி பேட்டி என மற்ற ஊடக வடிவங்களையும் புகுத்தியிருப்பது சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

புத்தகப் பிரியையான மகளின் புண்ணியத்தில் இந்தப் புத்தகம் பற்றித் தெரியவந்தது. பதின் வயதினரை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்ட புத்தகம் என்றாலும் மனதளவில் பதின்வயதினராக இருக்கும் என்னைப் போன்றோர் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம்.

நன்றி: கார்குழலி முகநூல் பதிவு

You might also like