…மற்றபடி மலேசியப் பயணமே மகிழ்ச்சியே!

கவிஞர் கோ. வசந்தகுமாரன்

பயண அனுபவம்:

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து அண்மையில் தமிழகம் திரும்பினேன். ஏற்கனவே ஒருமுறை சிங்கப்பூர் வழியாக மலேசியா வந்திருந்தபோதும் இப்போது நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது.

நண்பரும் சகோதரருமான வீரமணி / சந்துரு மூலம் அறிமுகமான கிறிஸ்டோபர் ராயப்பா /ஜான் இருவரின் அற்புதமான உபசரிப்பில் திளைத்துக் களித்தோம்.

கோலாலம்பூரிலிருந்து தனது காரில் என்னையும் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு கிறிஸ்டோபர் அவர்கள் ஈபோ / பினாங்கு / கெடா / லங்காவி போன்ற இடங்களுக்கு அழைத்துக்கொண்டு போனார்.

ஜான் அவர்கள் கோலாலம்பூர் நகர் முழுவதையும் தனது புதிய காரில் ஏற்றி சுற்றிக் காண்பித்தார்.

தஞ்சை கோனூர்நாடு அம்மையம்பட்டியைச் சேர்ந்த தங்கதுரை என்கிற ஆசிரியர் ராமச்சந்திரனின் மாணவர் நடப்பன / பறப்பன / ஊர்வன வகையறாக்களை ஹிம்சை செய்து சமைத்து உயர்தர ஒயினோடு விருந்துவைத்தார்.

கிட்டத்தட்ட மலேசிய நாட்டுக்குள் சுமார் 2000 கி.மீ பயணம் செய்து எல்லா இடங்களையும் கண்டுகளித்தோம்.

நண்பர் கிறிஸ்தோபர் ஒண்டிக்கட்டை என்பதாலும் வசதியானவர் என்பதாலும் அவரது சொந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே எங்களைத் தங்கவைத்துக் கொண்டதோடு அல்லாமல் சுவையாக சமைத்தும் எங்கள் பசிபோக்கினார்.

நமது ரூ.20 க்கு 1 மலேசிய வெள்ளி அதாவது 1 ரிங்கிட் மதிப்பாகிறது. இப்படி கணக்கிட்டு செலவு செய்தால் இந்தியாவில் விலைவாசி குறைவு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தரமான உணவுக்கும் / பொருள்களுக்கும் இங்கு உத்தரவாதம் உண்டு என்பதால் செலவு ஒரு பொருட்டல்ல என்பேன்.

மனித நாகரீகம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சுத்தம் சோறு போடும் என்று நாம் எழுதி வைத்துக் கொண்டதோடு சரி. மலேசியா போன்ற வெளிநாடுகளில்தான் இதைக் கடைபிடிக்கிறார்கள்.

மலேசியா மறக்கமுடியாத மண். சென்ற வருடம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் பீர் முகமது இறந்துவிட்டார்.

சென்றமுறை மலேசியா வந்திருந்தபோது திருமலை / ரவீந்திரன் இருவரோடும் அவரது இல்லம் சென்று பீர்முகமது அவர்களைச் சந்தித்தேன்.

இம்முறை அவரைச் சந்திக்க முடியாமல்போன பெருங்குறையைத் தவிர மற்றபடி மகிழ்ச்சியான பயணமே!

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like