சென்னையில் பிரபலமான சில பழைய தியேட்டர்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான், லஸ் ஜங்ஷன் அருகே உள்ள லக்ஷ்மி விலாஸ் மேன்ஷன் என்று அழைக்கப்பட்ட காமதேனு தியேட்டர் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12 அன்று தொடங்கப்பட்ட இடிபாட்டுப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட லக்ஷ்மி விலாஸ் மயிலாப்பூரில் உள்ள லஸ் சாலையில் பிரபலமான தியேட்டராக திகழ்ந்து வந்தது.
20 ஆம் நூற்றாண்டில் மயிலாப்பூர் முறையாக உருவாக்கப்பட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது, லட்சுமி விலாஸ் காமதேனு தியேட்டராக மாறியது. அதன்பின் இங்கே பல நூறு படங்கள் திரையிடப்பட்டன.
மயிலாப்பூர் பகுதியில் அப்போது இருந்த ஒரே திரையரங்கம் காமதேனு. அந்த நாட்களில் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து பல ஆயிரம் மக்களை ஈர்த்தது. டிக்கெட் விலை 50 பைசா இருந்த காலத்தில் இருந்தே அங்கே படங்கள் வெளியிடப்பட்டன.
திரையரங்கு மூன்று தலைமுறை சினிமா ஆர்வலர்களைக் கடந்து நிலைத்தது. இங்கே 2,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட்டது.
கொரோனாவிற்கு பின் இங்கே பெரிய அளவில் சினிமா திரையிடப்படவில்லை. இதில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட பல காரணங்களால் தியேட்டர் மூடப்பட்டு தற்போது இடிக்கப்பட்டு உள்ளது.
இது போக சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இங்கே வரப்போகும் புதிய மிகப்பெரிய திட்டம் பற்றிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் தற்போது அங்கே ஓடும் கர்ணன் உள்ளிட்ட பழைய படங்கள் விரைவில் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
“உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்..” என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் இருந்தது.
இந்த நிலையில்தான் அந்த தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார்.
சொத்துக்களைக் குடும்பத்திற்குள் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார்.
தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசா கிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.
இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது.
அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது அங்கே ஓடும் ரஜினியின் “வேட்டையன்” திரைப்படமே கடைசி படம் ஆகும்.
நன்றி: முகநூல் பதிவு.