திருச்சி எஸ்ஆர்வி பள்ளியின் ‘அறிஞர் போற்றுதும்’ நிகழ்வில் படைப்பூக்க விருதினைப் பெற்றுக் கொண்டேன்.
மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட விழா. இந்தப் பள்ளிக்கு திரைப்படங்கள் குறித்து பேசுவதற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன்.
மாணவர்களின் பங்களிப்பும் உரையாடலும் ஆச்சரியம் கொள்ளும் வகையில் இருந்தது. ஒரு பள்ளிக்கூடம் வாசிப்பையும், நல்ல திரைப்படங்களைப் பார்க்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறது என்பது முக்கியமானது.
நிகழ்வில் பேசி முடித்ததும் தேடி வந்து மாணவ மாணவிகள் என்னுடன் உரையாடினார்கள். அவர்கள் எனது சிறுகதைளைப் படித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியைகள் சிலரும் எனது கதைகள் குறித்து தனிப்பட்ட முறையில் பேசினார்கள். நெகிழ்வான தருணமாக இருந்தது.
இந்த விருது பற்றித் தெரிந்ததும் அகிலா, “நான் வாங்கித் தர்ற டிரஸ் தான் போட்டுக்கணும்” என்றார். அதைத் தான் அணிந்திருந்தேன். பாலைவன லாந்தர், அகிலா, ரேவா, ஜெயஸ்ரீ, குழந்தைகள் மயூரா, மித்ரா என சேர்ந்து சென்றிருந்தோம்.
எங்களுக்கு திருச்சி பயணம் மற்றுமொரு மறக்க முடியாத ஒன்றாக மகிழ்ச்சியானதாக மாறியிருக்கிறது. இத்தனை தூரம் எனக்காக அவர்கள் பயணம் செய்து வந்திருந்ததற்கு நன்றி சொன்னால் திட்டுவார்கள். ஆனாலும் நன்றி.
குழந்தைகளுக்கு இந்த திருச்சி பயணம் நல்லதொரு அனுபவமாக இருந்ததை இப்போது அவரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
விருதினைப் பெற்றபோதும், மாணவர்கள் வாழ்த்தியபோதும், தோழிகள் கட்டிக் கொண்டபோதும், மயூரா, மித்ரா என் கைகளை ஓடிவந்து பிடித்துக் கொண்டபோதும், அய்யப்பன் விருதுக்கான முதல் வாழ்த்தினை சொன்னபோதும் தோன்றியது..
இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கிறது.. இவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்று.
நன்றி: முகநூல் பதிவு