என் மாணவப் பருவ நண்பர் சு.ப.வீ!

இந்திரனின் நினைவலைகள்

இலக்கியத்தால் என்னைக் கவர்ந்த சுப.வீ என் இளமைக்கால நண்பர். சென்னையில் தமிழ் முதுகலை மாணவராக இருந்தபோதே “நற்றமிழ் பேசும் ஞானசம்பந்தராய்” தன் நாவன்மையால் எங்களை வசீகரித்தவர்.

1973 ல் ”புதுமலர்கள் இலக்கிய வட்டம்” எனும் அமைப்பைச் சென்னை எல்.எல்.ஏ அரங்கத்தில் சுப.வீயும் கவிஞர் ஜீவபாரதியும் இணைந்துத் தொடங்கியபோது கனல் பறக்கப் பேசியவர்.

தனது ”கனிமுத்து பதிப்பகம்” மூலமாக மலையாளக் கவி ”கமலாதாஸ் கவிதைகள்”, ”பகத்சிங் வரலாறு” போன்ற நூல்களை வெளியிட்டார்.

அன்புத் தம்பி திருமாவேலன் போன்றோருடன் தான் நடத்திய “இனி” இதழின் மூலம் எனது கட்டுரைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்தியவர்.

1972இல் கவிஞர் பொன்னடியானின் கடற்கரைக் கவியரங்கத்தில் “ஞானம்பாடி“ எனும் புனைபெயரில் நான் வாசித்த ”மனம்” எனும் காவடிச்சிந்து கவிதையைத் தான் பேசும் கூட்டங்களில் எல்லாம் அழகுற எடுத்துச் சொல்லி என்னைப் பிரபலப் படுத்தினார்.

கவிஞர் கோசின்ராவின் மகள் திருமணத்தில் சந்தித்த சுப.வீ “மனம்” எனும் என் கவிதையைச் சொல்லச் சொல்லி ரசித்தார்.

நன்றி: பேஸ்புக் பதிவு

You might also like