இன்னும் புழக்கத்தில் உள்ள ரூ. 7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள்!

ரிசர்வ் வங்கி தகவல்

செய்தி:   

நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கோவிந்த் கேள்வி:  

கடந்த ஆண்டு மே மாதம் 19-ம் தேதியே 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கு கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு 97.96 சதவீதம் நோட்டுகள் வங்கிகளுக்குத் திருப்பி வந்து விட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இப்போது இன்னும் 7,261 கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருப்பதாகவும் அந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்றும் ரிசர்வ் வங்கியே அறிவித்திருக்கிறது.

இப்படியே இன்னும் கால அவகாசம் நீடித்துக் கொண்டே போகுமா?

You might also like