உள்ளொளி எனும் அறிவாற்றலை உணர்வோம்!

நூல் அறிமுகம்:

குட்டிக் கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் உள்ளொளிப் பயணம் என்ற இந்த நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.

உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதான காதலாகவும் ஜீவன்கள் மீதான நேசமாகவும் இப்படி எண்ணற்ற உயர் பண்புகளாக மனிதனிடம் செயல்பட முடியும் என்பதைத் தெளிந்த நடையில் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.

முடிவின்றித் தொடரும் உள்ளொளிப் பயணம் மனிதனின் வாழ்வனுபவத்திலிருந்தும் கூட்டுச் சூழலிருந்தும்தான் செழுமைப்படுகிறது என்பதை இந்நூல் விரித்துரைக்கிறது.

******

நூல்: உள்ளொளிப் பயணம்
ஆசிரியர்: வெ.இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கங்கள்: 348
விலை: ரூ. 314/- 

You might also like