பெண்களுக்குத் தேவை ஜனநாயக இருப்பிடம்!

உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக் குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறுவனின் மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தரஞ்சன் தாஷ், பார்த்தசாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

2023 அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வழக்குத் தொடர்பாக கருத்து தெரிவித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பருவ வயது பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆண்கள், பெண்களுக்கு மரியாதை கொடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருந்தது.

மேலும், உடலைக் காத்துக்கொள்ளும் வகையில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும், சமூகத்தின் பார்வையில் பெண்களே நஷ்டமடைந்தவர்களாக அல்லது பாதிக்கப்பட்டவர்களாக பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டது.

இந்த நிலையில், இதனை கடுமையாக கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தீர்ப்புகளில் திணிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.

அதோடு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள், அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் இளம் பருவத்தினரின் உரிமைகளை முற்றிலும் மீறுவது எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

You might also like