கலைஞர் நூற்றாண்டு
நினைவு நாணயத்தை
ஒன்றிய அரசு
இன்று வெளியிடுகிறது
வரவேற்போம்; வாழ்த்துவோம்
காலமெல்லாம் இந்தியை எதிர்த்த
கலைஞர் நாணயத்தில் இந்தியா?
என்று சில தோழர்கள்
வினவுகிறார்கள்
அவர்களுக்கு
அன்போடு ஒருசொல்:
இந்தியப் பணத்தாளில்
இந்தியோடு தமிழும்
விளங்குவதால் அது
சமன்செய்யப்படுகிறது;
ஏற்றுக்கொள்கிறோம்
கலைஞர் நாணயத்திலும்
இந்தியோடு, ‘தமிழ் வெல்லும்’
என்ற கலைஞர் கையெழுத்தும்
இடம்பிடித்திருப்பதால்
இங்கும் அது
சமன்செய்யப்பட்டுவிட்டது
வரலாற்று நிகழ்வில்
வசை எதற்கு?
களிப்புறுவோம்
களங்கம் எதற்கு?
நிலவை ரசிப்போம்.