பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்!

திரைத் தெறிப்புகள்-17:

1971-ம் ஆண்டு வெளிவந்த ‘பாபு’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதியுள்ள இந்தப் பாடல் இப்படித் துவங்கும்..

“இதோ எந்தன் தெய்வம் முன்னாலே….
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே….

– என்று துவங்கும் இந்தப் பாடலை தன்னுடைய வழக்கமான அர்த்தச் செறிவான  உச்சரிப்புடன் பாடியிருப்பார் டி.எம்.சௌந்தர ராஜன்.

இந்தப் பாடல் காட்சிக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

அவருக்கு எதிரே அழகாகப் புன்னகைக்கும் குழந்தையாக ஸ்ரீதேவி.

அந்தப் பாடலில்தான்…

“தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை

அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்தச் சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்”

– என்று நகரும் பாடலில் மறக்கமுடியாத கீழ்க்கண்ட பாடல் வரிகளும் உயிர்ப்போடு இடம்பெற்றிருக்கும்.

“பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்”

என்று நிறைவு பெற்றிருக்கும் இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும் மனிதம் சார்ந்த வரிகள் மகத்தானவை. கருணை கொண்ட நெஞ்சங்களைக் கொண்டாடுபவை.

இதைவிட ஏழைத் தொழிலாளி சார்ந்த பார்வையோடு குழந்தையைப் பார்த்து கருணை பொங்க நடிகர் திலகம் பாடும் அந்தக் காட்சியமைப்பு இப்போதும் கருப்பு வெள்ளை பட நினைவாக நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

You might also like