முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!

சென்னை இராஜாஜி ஹாலில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழ் வல்லுநர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

அப்போது, இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜன் அவர்களுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாள் அவர்களுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத் தந்தை பம்மல் சம்பந்த முதலியார் அவர்களுக்கும், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் தங்கப்பதக்கமும், தஞ்சாவூர் கலைத்தட்டும் வழங்கி அவர்களை கௌரவித்தார்.

பல்துறை கலைஞர்களும், தமிழ்நாடு அமைச்சர்களும், கலந்துகொண்டு இம்மூவருக்கும் கௌரவம் செய்தார்கள்.

இந்த விழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களும் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் இருக்கும் இடத்தில் புன்னகைக்கு பஞ்சமா? புன்னகை மன்னன் அல்லவா அவர்.

படத்தில் முதலில் நிற்பவர் பம்மல் சம்பந்த முதலியார். அவருக்கு அடுத்து மக்கள் திலகம் எம்ஜிஆர். நடுவில் நிற்பவர் கே.பி.சுந்தராம்பாள். கடைசியில் மு.வரதராசனார்.

நன்றி : அரியலூர் சுகுமாரன் முகநூல் பதிவு.

You might also like