மனிதர்களுக்கு வியப்புகளும், கொண்டாட்டங்களும் தேவை!

எழுத்தாளர் வண்ணநிலவன்

என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘எஸ்தர்’ தொகுப்பு வெளியிட வேண்டும் என்று எனக்குத் தோன்றாமலிருந்தபோதே, நண்பர் விக்ரமாதித்யன் என்னை அணுகினார்.

”திருநெல்வேலி நண்பர்கள் உங்கள் தொகுப்பை வெளியிட வேண்டும் என்கிறார்கள், கதைகளைத் தாருங்கள்” என்றார். அச்சில் வந்தது, வராதது என்று கையிலிருந்த சிறுகதைகளை எல்லாம் விக்ரமாதித்யனிடம் கொடுத்தேன்.

இரண்டே மாதத்தில் ‘எஸ்தர்’ தொகுப்பு வெளியாகிவிட்டது. அத்தொகுப்பு வெளிவரக் காரணமான அத்தனை நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். திட்டமிட்டுச் செய்யவில்லை. எல்லாம் அதுவாகவே நடந்தது.

கதைகளைக்கூட பெரும்பாலும் திட்டமிடுவதில்லை. மனதில் சிறு பொறி தட்டும். எழுத உட்கார்ந்தால் எழுத எழுதக் கதை தானே வளரும்.

‘எஸ்தர்’ சிறுகதையை எழுதும்போது, அதற்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என்று நினைத்ததில்லை. ‘எஸ்தர்’ கதைக்கு ஏன் இத்தனை பாராட்டு என்பது இன்னமும் புரியவில்லை.

பல சிறுகதைகளைப் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. அதற்காக வருத்தமும் இல்லை.

எல்லாம் உலகின் இயல்பு. ஏதாவது ஒன்றைக் கொண்டாடித் தீர்ப்பதும் இப்படித்தான். மனிதர்களுக்கு வியப்புகளும் கொண்டாட்டங்களும் வேண்டும்.

– ‘நற்றிணை’ பதிப்பகம் வெளியிட்ட ‘வண்ண நிலவனின் சிறுகதைகள்‘ நூலின் முன்னுரையில்.

#எழுத்தாளர்_வண்ணநிலவன் #சிறுகதைத்_தொகுப்பு #எஸ்தர் #நற்றிணை #எஸ்தர் #சிறுகதைகள் #Natrinai #Esther #short_stories #writer_vannanilavan

You might also like