சாதனையாளர்களின் சந்திப்பு!

அருமை நிழல்:

இது ஒரு அழகான கலவையான கலைத்தன்மை உள்ள காட்சி.

ஆரம்பகால தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் அருகில், தமிழ்த் திரையுலக முன்னோடியும் தமிழ் சினிமாவின் முதல் வெள்ளிவிழா படமான பவளக்கொடி படத்தில் தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட பலரை அறிமுகம் செய்து வைத்த மூத்த இயக்குனர் கே.சுப்ரமணியம் நிற்க, அவருக்கு அருகே பாகவதரின் நெருங்கிய நண்பரான, நகைச்சுவையால் மக்களைக் கவர்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நிற்கிறார்.

முன்வரிசையில் அமர்ந்திருப்பவர்கள்: மாயா வினோதக் குரல்வளம் கொண்ட எம்.எல்.வசந்தகுமாரி, கலைவாணரின் மனைவி டி.ஏ.மதுரம்; நடிகையாகவும் மிகச்சிறந்த பாடகியாகவும் திகழ்ந்த என்.சி.வசந்தகோகிலம்.

இந்தப் படம் மிகமிக அரிய படம் என்று சொல்வதற்கு இன்னொரு காரணம், இயல், இசை, நாடகம் என மூன்று வகை சாதனையாளர்களும் ஒருங்கே இருக்கும் படம் இது.

– நன்றி: முகநூல் பதிவு

You might also like