மனித உணர்வுகளை வெளிப்படுத்த பல வழிகளை நாம் கையாண்டு வருகிறோம். அந்த வகையில் நவ நாகரிகத்தின் வெளிப்பாடான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்டது தான் ஈமோஜி.
மகிழ்ச்சி, நன்றி, கோபம், வெற்றி, நட்பு, காதல் என பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்த கார்ட்டூன் பொம்மை மூலம் வெளிப்படுத்த சமூக ஊடகங்களின் சகாப்தத்தில், ஈமோஜிகள் நமது அன்றாட தகவல்தொடர்புகளில் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது.
சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ட்விட்டர், ஷேர்சாட் போன்ற தளங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இந்த ஈமோஜி பயன்படுத்தப்படுகிறது.
ஒருவர் எழுதியதை விமர்சிக்க அல்லது பாராட்ட இந்த ஈமோஜி பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை விமர்சனம் செய்வதற்கு மேம்படுத்துவதற்கும், இந்த சிம்பள் (symbol) உதவுகிறது.
பொதுவாக இந்த ஈமோஜிகள் தற்போது பயன்படுத்தும் டச்போன், கணினி மற்றும் பல தொழில்நுட்பத் தகவல் தொடர்பு சாதனங்களில் இருக்கின்றன.
இந்த சிறிய டிஜிட்டல் சின்னங்கள் மொழித் தடைகளை தாண்டி, நம்மை மிகவும் திறம்பட தொடர்புகொள்ள உதவுகிறது.
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது முதல் சோகத்தை அல்லது நகைச்சுவையை வெளிப்படுத்துவது வரை, ஈமோஜிகள் நவீன கால உரையாடல்களில் இன்றியமையாத கருவியாக உருவெடுத்துள்ளது.
ஒவ்வொரு ஈமோஜி சின்னத்திற்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. இதில் பிரபலமாக இருப்பது 151 ஈமோஜிக்கள். அந்த வகையில் சிரித்த முகம், மகிழ்ச்சியான உணர்வின் வெளிப்பாடாக இருக்கிறது. பிரபலமாக இருக்கும் இந்த சின்னங்களின் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
திறந்த வாய் – மகிழ்ச்சி மற்றும் உற்சாகம்
வியர்வையுடன் சிரிக்கும் முகம் – பதட்டம், நிவாரணம், சங்கடமாக பார்க்கப்படுகிறது.
கண்ணீருடன் சிரிக்கும் முகம் – அடக்கமுடியாமல் சிரிப்பது
லேசாக சிரிக்கும் முகம் – பொது நேர்மறை உணர்ச்சி
தலைகீழான முகம் – முட்டாள்தனம், கிண்டல்
கண்சிமிட்டும் முகம் – நட்பான கிண்டல்
இதயத்துடன் சிரிக்கும் முகம் – காதல் மற்றும் அன்பின் வெளிப்பாடு
நாக்குடன் முகம் – முட்டாள்தனம், குறும்பு
ஸ்டார் – ஸ்ட்ரக் – பிரமிப்பு, வியப்பு
மேதாவி முகம் – நுண்ணறிவு, அழகற்ற தன்மை
சன் கிளாஸ் சிரித்த முகம் – நம்பிக்கை, அலட்சியம்
வெளிப்பாடு இல்லாத முகம் – அக்கறையின்மை, ஆர்வமின்மை
முகம் சுளிக்கும் முகம் – சோகம், அதிருப்தி
முகத்துடன் சூரியன் – அரவணைப்பு, நேர்மறை
கையை உயர்த்தும் நபர் – பங்கேற்பு, தன்னார்வத் தொண்டு
தூங்கும் முகம் – சோர்வு, ஆர்வமின்மை
இவ்வாறு பல சின்னங்கள் உணர்வின் வெளிப்பாடாக உள்ளது.
அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், அவற்றின் பயன்பாட்டைக் கொண்டாடவும், உலக ஈமோஜி தினம் ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதி அன்று உலக அளவில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஈமோஜி ஆரம்பத்தில், ஜப்பானிய மொபைல் போன்கள் மற்றும் செய்தித் தளங்கள் வழியாக பிரபலமானது. முதல் ஈமோஜி 1999-ம் ஆண்டு ஜப்பானில் ஒரு பொறியாளரால் உருவாக்கப்பட்டது.
அதன்பிறகு ஷிகேடகா குரிகா, அந்த நேரத்தில் ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனமான என்.டி.டி டோகோமோவில் பணிபுரிந்தார். அதன் பிறகு, i-mode எனப்படும் மொபைல் ஒருங்கிணைந்த சேவையை வெளியிடுவதற்காக 176 ஈமோஜிகள் உருவாக்கினார்.
பிறகு 2007-ம் ஆண்டு, கூகுளில் உள்ள ஒரு மென்பொருள் சர்வதேசமயமாக்கல் குழுவானது கணினிகள் முழுவதும் உரை தரங்களைப் பராமரிக்கும் ஒரு இலாப நோக்கற்ற குழுவான யூனிகோட் கன்சோர்டியம் மூலம் ஈமோஜியை அங்கீகரிக்கும் படி மனு கொடுக்கப்பட்டது.
பின்னர், 2010-ம் ஆண்டிற்கு பிறகு ஸ்மார்ட்போன்களின் புழக்கம் அதிகரித்ததால், யூனிகோட் இறுதியாக ஈமோஜிகளின் பயன்பாட்டுத் தரத்தை உயர்த்தியது.
2014-ம் ஆண்டில் ஈமோஜி பீடியாவின் நிறுவனர் ஜெர்மி பர்ஜால் அவர்களால் நிறுவப்பட்டது.
இது ஈமோஜி தொடர்பான தகவல் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் ஆதாரமாக கொண்டு செயல்பட்டது.
ஈமோஜி ஆர்வலரான பர்ஜ், நவீன தகவல் தொடர்புகளில் வளர்ந்து வரும் இந்த ஈமோஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து அங்கீகரித்தார்.
ஆகவே, இந்த டிஜிட்டல் ஐகான்களை கௌரவிக்க ஒரு பிரத்யேக நாளை உருவாக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார்.
அதன் காரணமாக ஜூலை 17-ம் தேதி உலக ஈமோஜி தினத்திற்கான தேதியாக அறிவித்தார் பர்ஜ்.
– யாழினி சோமு