தமிழ் வீடு என்பது தனித்துவமான கட்டடக் கலையமைப்பு கொண்டது. நான் பிறந்த பாண்டிச்சேரி வீடுகளின் திண்ணை என்பது ஒரு பொது வெளியாக புழங்குவதை நான் கண்டிருக்கிறேன். இங்கே வழிப்போக்கர்களும் சற்றே இளைப்பாறலாம்.
“அணிலாடு முன்றில்” என்று பேசும் சங்க காலத்திலேயே வீட்டில் முன்றில் என்பது எவ்வாறு இயற்கையோடு இயைந்திருந்தது என்பதைக் காட்டுகிறது. முற்றத்தில் வெயிலும் மழையும் சகஜமாக விளையாடும்.
வெப்ப நாடுகளுக்கே உரிய தனித்துவ ஏற்பாடு இது. இதன் திண்ணை, முற்றம், புழக்கடை, சமையலறை ஆகியவை இயற்கையோடும், சமூகத்தோடும் முறையாக உறவு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டவை.
புதுச்சேரியில் இந்த தமிழ் வீடு பிரெஞ்சு கட்டடக்கலையுடன் எவ்வாறு இணைந்திருக்கிறது என ஆராய்வது மிகவும் சுவையானது.
நன்றி: இந்திரன் முகநூல் பதிவு