நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை முருகன் கைதாகி விடுதலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக குறித்தும், திமுக தலைவராக இருந்த கலைஞர் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சாட்டை முருகன்.

அவர் கைது செய்யப்பட்ட செய்தி உடனே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலதரப்பட்ட கண்டனங்கள் எழுந்தன. அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களும் கைது நடவடிக்கையைக் கண்டித்தார்கள்.

இதை தொடர்ந்து “முதலில் சவுக்கு… இப்போது சாட்டையா…” என்றெல்லாம் கூட சமூக வலைத்தளங்களில் தொடர் கைதுகளைப் பற்றி எதிர் விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு விடுவிக்கப்பட்ட அவர் வெளியே வந்ததும் பேசிய பேச்சு உண்மையிலேயே பகீர் ரகமாக இருந்தது.

“என்னை கைது செய்த பிறகு நான் வந்த வாகனத்தை சேதப்படுத்தி என்னை கொல்வதற்கான முயற்சியை காவல்துறை செய்தது” என்கின்ற பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து ஊடகங்களுக்கு மறுபடியும் உஷ்ணமான செய்தியைக் கொடுத்திருக்கிறார் சாட்டை முருகன்.

சாட்டைகளும் ஓய்வதில்லை போலிருக்கிறது.

You might also like