சிறிது நாட்களுக்கு முன்பு கடற்கரையிலும் திருவிழாக்களிலும், ஏன் கல்யாண மண்டபங்களின்கூட புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாய் மீது புகார் சுமத்தப்பட்டது. அந்தப் பஞ்சு மிட்டாயில் கலரை சேர்ப்பதற்காக ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன.
இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.
தற்போது அடுத்த பழி, பானிபூரி மீது விழுந்து இருக்கிறது. அதிலும் தமிழ்நாடு முழுக்க வடக்கத்தியர்கள் சின்னதாக ஒரு பானிபூரிக் கடையை நடத்தி, நம் ஆட்களும் அதை ருசித்து விழுங்கிக் கொண்டிருந்தார்கள்.
தற்போது அதிலும் ஆபத்தான ரசாயனம் கலப்பதாக புகார்கள் கூறப்பட்டு பானிபூரிக்கடை வைத்திருந்தவர்கள் திணறிப் போயிக்கிறார்கள். அதை ஆர்வத்துடன் சாப்பிட்டு ருசிக்கண்டவர்களுக்கும் கொஞ்ச ஆடித்தான் போய் இருக்கிறார்கள்.
பற்றாக்குறைக்கு இப்போது தெருக்களில் ஆங்காங்கே விற்கப்படும் காளான்கள் மீது இதே விதமான ரசாயனப் புகார்கள் கூறப்பட்டு அவை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
சாதாரண நடுத்தர வர்க்கத்து மக்கள் எதை தான் நம்பி சாப்பிடுவார்கள்?
சில காலத்திற்கு முன்பு அஜினமோட்டோ கலந்து நூடுல்ஸ் விற்பதாகச் சொல்லிக்கூட சில தடை உத்தரவுகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்டன.
ஆனால் தற்போது ஓட்டலில் சர்வ சாதாரணமாக அதே அஜினமோட்டோ கலந்த நூடுல்ஸ் விதவிதமாக விற்பனை ஆகிக் கொண்டு இருக்கின்றன.
சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள் எதை எதை தான் செரித்துக் கொள்வது?