ஆஹா… பேஷ் பேஷ்… நன்னாயிருக்கு போங்கோ!

- காபிக்குக் கிடைத்த சர்டிபிகேட்

அண்மையில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஆந்திர மாநில அரக்கு காபியின் சுவை, மணத்தை வெகுவாகப் பாராட்டினார்.

வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இந்தியாவில் உற்பத்தியாகும் ஏராளமான தயாரிப்புகளுக்கு உலக அளவில் அதிக தேவை உள்ளது. அத்தகைய தயாரிப்புகளில் ஒன்றுதான் ஆந்திராவின் அரக்கு காபி. அதன் செழுமையான சுவை, நறுமணத்துக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு.

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன.

ஒருமுறை விசாகப்பட்டினம் சென்றபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து அரக்கு காபியை ருசித்தது மறக்க முடியாதது.

உலக அளவில் அரக்கு காபிக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போதும் உலக தலைவர்கள் பலர் அரக்கு காபியின் சுவையை வெகுவாகப் புகழ்ந்தனர்” எனக் கூறினார்.

அரக்கு காபிக்கு கடந்த 2019-ல் புவிசார் குறியீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like