அருமை நிழல்:
‘பட்டினத்தார்’ 1962-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கே.சோமுவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன், ஜெமினி கே.சந்திரா, எம்.ஆர்.ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தின் திரைக்கதையை கே.சோமுவும், வசனங்களை தஞ்சை இராமையாதாஸ், எழுத்தாளர் அகிலன் ஆகியோரும் எழுதினர். டி.எம்.சௌந்தரராஜன் பாடல்களை பாடியிருந்தார்.
டி.கே.சுந்தர வாத்தியார், தஞ்சை ராமையாதாஸ், கு.மா.பாலசுப்பிரமணியம், அ.மருதகாசி, மற்றும் பட்டினத்தார் ஆகியோரின் பாடல்களுக்கு ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார். டி.எம்.சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், பி.சுசீலா, பி.லீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.
11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் எனும் புலவரின் வரலாற்றை ஒட்டிய இத்திரைப்படத்தில் பட்டினத்தாராக டி.எம்.சௌந்தரராஜனும், பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக ஜெமினி கே. சந்திராவும் நடித்திருந்தனர்.
பட்டினத்தாராக நடித்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் பெரும்பாலான பாடல்களை பாடினார். பி.லீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, திருச்சி லோகநாதன், பி.சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.
பழம்பெரும் ஜாம்பவான்கள் ஒன்றிணைந்த படம் பட்டினத்தார் படத்தில் இடம்பெற்ற குழுவினரின் ‘குழு’ படம்.
– நன்றி : முகநூல் பதிவு
#எழுத்தாளர்_அகிலன் #இசைமேதை_ஜி_ராமநாதன் #ஜெமினி_சந்திரா #இயக்குனர்_சோமு #டி_எம்_எஸ். #writer_agilan #gramanathan #gemini_chandra #director_somu #tms #பட்டினத்தார் #pattinathar #பி_சுசீலா #p_suseela