உண்மைகளைவிட அதிகம் கொண்டாடப்படும் போலிகள்!

சார்லி சாப்ளின் புகழ் பெற்ற நிலையில், அவர் பிறந்த ஊரில் அவரைப் போல் தத்ரூபமாக நடிப்பவர்களுக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டது.

நடித்த பலரில் முதல் 5 பேரைத் தேர்வு செய்தபோது, அந்த ஐந்தாம் நபர் கடும் ஆட்சேபனைக் கூறியுள்ளார்.

முதல் பரிசு வாங்கியவர் அந்தப் பரிசிற்கு தகுதியற்றவர் என்று ஐந்தாம் நபர் கூறும்போது, அவர் பொறாமையால் கூறுகிறார் என்றே மற்றவர்கள் எடுத்துக் கொண்டனர்.

எனினும் அழுத்திக் கேட்டபோது, அவர் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.

ஆம், அந்த ஐந்தாம் நபர் சார்லி சாப்ளின் தான்.

இந்த மாதிரியான அனுபவம் நிறைய பிரபலங்களுக்கு நடந்திருக்கிறது.

ஏன் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா?

Duplication அல்லது வேடமிடுதல் என்பதில் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் இருக்கும்.

உண்மையான சாப்ளின் நின்றபோது அவர் இயல்பாக, எந்த விதமான நடிப்பும் இல்லாமல் நின்றிருப்பார்.

ஆனால் அவரைப்போல நடிக்க வந்தவர்கள் வெகு சிறப்பாக அந்த கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.

இதில் உண்மையில் பரிதாப நிலையில் இருப்பது பார்வையாளர்கள் மட்டுமே.

ஏனென்றால், நாம் என்ன பார்க்க விரும்புகிறோமோ அதை மட்டுமே பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால், நாம் என்ன பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதை மட்டுமே தேடுகிறோம்.

அதனாலேயே உண்மைகளை விட போலிகள் அதிகம் கொண்டாடப்படும். ஆம், நாம் கேட்கும் அளவில், கேட்டது போலவே அழகாக அம்சமாக வசீகரிப்பவை போலிகள்!

Duplication may be the best presentation sometimes!!

– நன்றி: கார்த்தி சௌந்தர் முகநூல் பதிவு

You might also like