மோகன் நடிக்க மறுத்த மௌனராகம்-2!

மெளனராகம் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் ‘அஞ்சலி’ படத்தை எடுக்க நினைத்த மணிரத்னம், அதற்காக கதாநாயகன் கதாநாயகியாக ‘மோகன் – ரேவதி’ ஆகியோரை புக் செய்துள்ளார். அதாவது கதைப்படி மெளனராகம் தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைதான் அஞ்சலி.

சில காரணங்களால் மோகனால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால், ரகுவரனை ஒப்பந்தம் செய்தாராம் மணிரத்னம்.

தற்போது தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் இதை உறுதி செய்துள்ள மோகன், ஏன் அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தையான அஞ்சலி, தனியறையில் தூங்குவது போல வரும் காட்சிகளுக்கு மோகன் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.

”ஒரு அப்பாவாக என்னால் அதை ஏற்கமுடியவில்லை. அதெப்படி அஞ்சலி பாப்பாவை தனியாக ஒரு அறையில் தூங்க வைக்க முடியும்? அப்பா அம்மா உடனிருக்க வேண்டாமா?” என்று மணிரத்னத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் இருவருக்குமே ஒப்புதல் இல்லாமல் போனதை அடுத்து, அஞ்சலி படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார் மோகன்.

– நன்றி: முகநூல் பதிவு

#anjali movie #மெளனராகம் #அஞ்சலி #மணிரத்னம் #மோகன் #ரேவதி #ரகுவரன் #mounaragam #manirathnam #mohan #revathi

You might also like