தமிழக எம்.பி.க்கள் தாய்மொழியில் பதவியேற்க கோரிக்கை!

விசிக எம்.பி ரவிகுமார்

நடந்து முடிந்த 18-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து திமுக கூட்டணியைச் சேர்ந்த 40 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்க உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்க முன்வரவேண்டும் என விசிக பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான முனைவர் துரை.ரவிக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாடு, புதுச்சேரியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 40 உறுப்பினர்களும் 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே இந்த முறையும் தமிழில் பதவியேற்க முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அதோடு, பதிவு செய்துகொள்ளும்போதே அந்தப் படிவத்தில் Affirmation in Tamil எனக் குறிப்பிடுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like