தந்தைக்கு மகன் ஆற்றியிருக்கும் சிறப்பு!

‘ஔவையின் சிந்தனைப் புதையல்’ என்ற தலைப்பின் கீழ் தனது தந்தையும் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் கையெழுத்தில் பதிவானவற்றை 412 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக, சிறப்பாக தொகுத்துத் தந்திருந்திருக்கிறார் தற்போது தமிழ் வளர்ச்சித் துறையில் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் மகனான முனைவர் ஔவை அருள். 

தான் சந்தித்த பல தலைவர்கள், தமிழறிஞர்கள், கலைத்துறையினர் என்று பலரைப் பற்றி வியந்து எழுதியிருக்கிறார், பாராட்டியிருக்கிறார். மிகவும் சிக்கனமான வரிகளில் அதை சொந்தக் கையெழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ஔவை நடராசன்.

ஒரு நாட்குறிப்பை எழுதுவதில் புலப்படும் அந்தரங்கத் தன்மை இந்தப் பதிவிலும் வெளிப்பட்டு இருக்கிறது. வாசிப்பதற்கும் நல்ல அனுபவமாக இருக்கிறது.

அந்த நூலிலிருந்து சில பதிவுகளை மட்டும் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

 1. கலைச்செல்வம் (திரைக்கலைஞர் சிவகுமாரைப் பற்றி)

உதயணன் என்று கூறுவதுண்டு. திராவிட பல்கலைத் துணைவேந்தர் சிறந்த கதை நாவலாசிரியர்.

அவருடைய கதாநாயகன் நாதசுரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சாதி வேறுபாடு எப்படி இழிவு செய்கிறது என்பது கதை, இது திசையெட்டும் இதழில் போன மாதம் வந்தது. மொழிபெயர்த்தது தமிழ்ப் பேராசிரியர்.

சிவகுமார் – 80:

சிந்தையால் செயலால் எவர் சென்னியிலும் வீற்றிருக்கும் சீர்த்தி வளர்ந்த கலைத் திலகம் சிவகுமாருக்கு 80-ம் அகவை தொடங்கு கிறது.

நல்லோர் எல்லோரும் ஒருங்குகூடிப் பல்லாண்டு கூறுகின்றனர்.

தமிழினத்துக்கு வாய்த்த கலைச்செல்வத்தை வாழ்த்திப் போற்றுகிறேன்.

*****

          2. சொல்லோவியம் (கலைஞர் கருணாநிதி பற்றி)

கலைஞரின் எழுத்துப் பரப்பை எண்ணிப் பார்க்க முயல்வோமென்று ஒரு கணக்கிட்டோம். ஒரு நாளைக்குப் பத்துப் பக்கம் என்று எழுபது ஆண்டுகளுக்குக் கணக்கிட்டோம்.

ஒரு நாளைக்கு 10 பக்கம் என்று கணக்கிட்டால் அறுபது ஆண்டுகளுக்கு மொத்தம் 2,55,500 பக்கங்கள்.

*****

          3. மொழிபெயர்ப்புத்திறன்

மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தல் என்பது தொல்காப்பியம் காட்டும் நோக்கமாகும்.

அரியது எது என்று கேட்டால் ஒளவையாருக்கும் முருகனுக்கும் நடந்த உரையாடலைக் கூறுவார்கள்.

நாம் வேண்டுமானால்,

அரிது அரிது ஆங்கிலம் அறிதல்
அதனினும் அரிது அருந்தமிழ் அறிதல்
ஏனை இரண்டும் அறிந்த போதும்
ஒன்றை மற்றொன்றாக மொழிபெயர்த்து எழுதல்
அரிதினும் அரிது அளவிடற்கு அரிதே!

மார்க்சின் மூலதனத்தை மலையாளத்தில் 40 பேரும் தமிழில் ஏறத்தாழ 20 பேரும் மொழி பெயர்த்த போதும் முழுநிறைவை எந்த மொழியாக்கத்திலும் காண முடியவில்லை என்பார்கள்!

எதையும் மொழி பெயர்க்கலாம்
எதையும் மொழி பெயர்க்க முடியாது

என்று ஆங்கிலத்தில் William Paten என்பவர் கூறினார். Anything could be Translated Nothing could be Translated.

*****

நூல் : ஔவையின் சிந்தனைப் புதையல் நூல்
தொகுப்பாசிரியர்: முனைவர் ஔவை அருள்
எண்: 12/6, போயஸ் சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை – 600 018.
044 – 4341 8700
96000 64311

You might also like