நூல் அறிமுகம்:
📖வகுப்பறையானது பொதுவாக மாணவர்களுக்கு பாடங்களை சொல்லித் தரும் இடமாகவும் அறிவுரை வழங்குவதோடு கண்டிப்பு நிறைந்த இடமாகவும் இருக்கும்.
ஆனால், இந்நூலில் வரும் ஆசிரியர் பள்ளிப் புத்தகங்களைத் தாண்டி, தனி மனித உணர்வுக்கு மதிப்பளிப்பது குறித்தும், சமூகம் சார்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களை கற்றுத் தருவதோடு, அதைக் குறித்த விழிப்புணர்வை அவர்களே புரிந்து கொள்ளும் விதமாக பல குறும்படங்களையும் மாணவர்களை பார்க்கச் செய்து, அதன் பிறகு அப்படங்களிருந்து அவர்கள் உணர்ந்தவற்றை குறிப்பெடுக்க வைப்பதோடு அது குறித்து அவர்களோடு கலந்துரையாடுகிறார்.
📖அவருடைய சொந்த அனுபவங்களை நூலாக்கி நம்முடன் பகிர்ந்திருக்கிறார் ஆசிரியர்.
📖ஆசிரியர் வேலைக்கு முன்பு சமூக ஆர்வலராக இருந்ததோடு, வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களோடு சேர்ந்து வாழ்ந்திருப்பதால் அடித்தட்டு மக்களின் நிலைமையையும், பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கு ஒரே விதமான குடும்பச் சூழல் அமையாத காரணத்தால், மாணவர்களின் மனநிலையை ஒரு ஆசிரியர் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அவர்களை வழி நடத்துவது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என ஒவ்வொரு கட்டுரையிலும் காணலாம்.
இந்நூலில் குறிப்பிட்டுள்ள குறும்படங்களாவன:
ஆசான், 1 மார்க், தப்பு கணக்கு, அவளதிகாரம், கலர் மீன், தர்மம், Man, பசி, In a heartbeat, கர்ண மோட்சம், சவடால், The exam, The dog, மொட்டுக்கா, Identity, செங்காந்தாள், பார் சைக்கிள், Ambani the investor, Alike, Scribbling, Start a little good ஆகியவையாகும்.
📖பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டு வருவதை பற்றி யோசிப்பதை மட்டும் கருத்தில் கொள்ளாது, மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனநிலையையும் எதிர்கால வளர்ச்சிக்கு தகுந்தவாறு பள்ளிச் சூழலிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
📖 ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் அவர்களுக்கு போதிக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்கிறார்.
புத்தகம்: கரும்பலகைக்கு அப்பால்
ஆசிரியர்: கலகலவகுப்பறை சிவா
புக்ஸ் பார் சில்ரன் பதிப்பகம்
பக்கங்கள்: 64
விலை: ரூ. 76/-