நூல் அறிமுகம்:
‘எண்ணங்கள் – வெற்றிகள்’ என்ற இந்த நூலும் மூன்று முத்தான பகுதிகளை உள்ளடக்கித் தான் தரப்படுகிறது.
*மனமிருந்தால் மார்க்கமுண்டு* என்னும் முதல் பகுதி ‘எண்ணம் போல வாழ்வு’ என்பதையும், சரியாக நினைத்தால் அதை நம்மால் அடைய முடியும் என்பதையும் பல சம்பவங்கள் மூலம் நமக்குக் கூறுவதாக அமைகின்றது.
இரண்டாவது பகுதியான *நம்பிக்கை* என்ற தலைப்பு மனிதர்கள் நம்பிக்கை என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு சாதித்தவர்களைச் சுட்டிக் காட்டுகின்றது.
மூன்றாம் பகுதியில் *வென்றோர் மந்திரங்கள்* தரப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற மனிதர்கள் நமக்குத் தரும் முத்தான அறிவுரைகள் அல்லது ஊக்கமிகு வழிகள் எவை? என்பதை வாசிக்கும் தங்களுக்கு வழங்குகின்றது.
இந்நூலை வாசிக்கும் தாங்களும், பிறரும் ‘நல்ல எண்ணங்களே வெற்றிக்கான மந்திரங்கள்’ என்பதை நிச்சயமாக உணர்வீர்கள்.
நூல்: எண்ணங்கள்! வெற்றிகள்
ஆசிரியர்: மெ. ஞானசேகர்
கோரல் பதிப்பகம்
பக்கங்கள்: 168
விலை: ரூ.160/-
#Ennangal_Vetrigal #எண்ணங்கள்_வெற்றிகள்_நூல் #மெ_ஞானசேகர் #ennagal_vettrigal_book_review #me_gnanasekar