சிவாவுடன் 5-ம் முறையாக இணையும் அஜித்!

’அல்டிமேட்’ ஸ்டார் அஜித், ‘விடாமுயற்சி‘ படத்தில் நடித்து முடித்துவிட்டு, ‘குட்.. பேட்.. அக்ளி’ எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் யாருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் தெரியுமா?

சிறுத்தை சிவா.

அவர் இப்போது சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘கங்குவா’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இதன் இசைக் கோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தின் எடிட் செய்யப்பட்ட பகுதிகளை அஜித்துக்கு அண்மையில் போட்டுக்காட்டினார் சிவா.

படத்தைப் பார்த்த அஜித் அசந்து போனார். தனது அடுத்த படத்துக்கு அந்த நிமிடத்திலேயே, சிவாவுக்கு தேதிகள் ஒதுக்கினார் அஜித்.

அஜித்தை வைத்து சிவா ஏற்கவனே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

விவேகம் தவிர மற்ற அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன.

அஜித் – சிவா இணையும் 5-வது படத்துக்கு தற்காலிகமாக ‘ஏகே-64’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

-பாப்பாங்குளம் பாரதி.

You might also like