ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியம்!?

நூல் அறிமுகம்:
ஒரு தேநீர் இடைவேளை எத்தனை அவசியமாகிறது… உறவுக்குள் பாலமாய், புரிதலுக்கான அவகாசமாய், வேலையின் இறுக்கம் தளர்த்த, மனதின் இரைச்சலை அணைக்க… இது எதற்கும் இல்லையென்றாலும் சரி அருகருகே அமர்ந்திருக்கும் அந்த தருணத்தின் இனிமை மட்டுமே போதும்.
நிற்க நேரமில்லாமல் ஒவ்வொருவரும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், இதையெல்லாம் உணர்ந்து கவனத்தில் வைத்துக் கொள்ள முடியுமா..? என்றால்…
ஏன் முடியாது..? நிச்சயம் முடியும்… அதற்கு உங்களுக்கு கொஞ்சம் நேரமும் தேநீரை விரும்பும் மனமும் இருந்தால் போதும்..
எவ்வளவு பெரிய மௌனத்தையும் கண்ணிமைக்கும் நேரத்தில் உடைத்து விடலாம் என்ற நம்பிக்கையை விதைக்கும் கதைக்களம்.
நாம் சற்றுப் பரவலாக சிந்தித்து பார்த்தோமானால், எப்போதும் ஒரு சந்திப்பானது… அது எந்த உறவின் அடிப்படையிலானாலும், எந்த ஒரு நிகழ்வென்றாலும், அதன் நோக்கம் எதுவென்றாலும்… பெரும்பாலும் அங்கு தேநீர் கோப்பைகள் தான், உறவுப்பாலங்களாக பரிமாணம் கொள்கின்றன.
நாம் தேநீர் பருகும் அந்த சில நொடிகள் அல்லது நிமிடங்கள்… நம் மனதின் உணர்வுகள் எல்லாம்… தேநீர் கோப்பையின் ஆவியைப் போலவே, காற்றில் கலந்து இலேசாகிறது.
எவ்வித எதிர்மறையான எண்ணங்களும் நேர்மறையில் அடைக்கலமாகி விடும்.. அனுபவம் உறவினை அர்த்தப்படுத்தி விடும்..
*****
நூல்: இரு தேநீர் கோப்பைகள் இருவருக்குமிடையில்
ஆசிரியர்: அனிதா சரவணன் 
கிண்டில் பதிப்பகம்
விலை: ரூ.204/-
You might also like