திருக்காட்டுப்பள்ளி சர். சிவசாமி ஐயர் ஹையர் செகண்டரி ஸ்கூலில் நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது, முதல் முதலில் எனக்கு ஒரு ஷூட்டிங் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
எங்கள் பள்ளியிலேயே இயக்குனர் துரை அவர்களின் ‘ஒரு வீடு ஒரு உலகம்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஷோபா அவர்கள் பாவாடை தாவணியுடன் இளமையாக நடந்து வருவதாகவும், பின்னர் விதவை கோலத்தில் இருப்பது போலவும் படம் எடுத்தார்கள்.
நாங்கள் எல்லோரும் மாடியில் இருந்து கண் கட்டாமல் அதை பார்த்துக் கொண்டே இருந்தோம். முத்தையாவும் நானும் அந்த இயக்குனரின் சொல்பேச்சுக்கு ஒரு 100 பேர் இயங்குவதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அதுதான் காரணமா, நான் சினிமாவிற்கு வருவதற்கு என்று தெரியவில்லை. அப்பொழுது எந்த எந்த பொறியும் தட்டவில்லை.
ஆனாலும் நம்மை அறியாமல் சைக்கலாஜிக்கலாக ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம், என்றுதான் இப்பொழுது யோசிக்கும் போது தோன்றுகிறது.
எல்லா காரண காரியமும் ஏதோ ஒன்றை நோக்கி நம்மை பயணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
பாலுமகேந்திரா அவர்கள் சொல்லுவார்கள். ஒரு முறை டேவிட் லீன் படப்பிடிப்பைப் பார்த்தபோது அவர் மழை என்றால் மழை பெய்கிறது. நில் என்றால் நிற்கிறது. ஒருவேளை அவர் கடவுளோ என்று நினைத்தேன் என்று.
அவரது சிறுவயது ஞாபகங்களை பகிர்ந்து கொண்டார். அதுபோல தான் ஒரு மேஜிக் அந்த நாட்களில் நடந்திருக்க வேண்டும்.
நன்றி: முகநூல் பதிவு