நாட்டுப்புறக் கலைகள் பற்றித் தெரிந்துகொள்வோம்!

நூல் அறிமுகம்:

பாரதிதாசன் பல்கலைக்கழக நிகழ்கலைப் பள்ளியின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் படித்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

இக்கட்டுரைகள் நாட்டுப்புற ஆட்டக் கலைகளின் வளர்ச்சி நிலைகளையும், தேக்க நிலைகளையும், மாற்ற நிலைகளையும் காட்டுகின்றன.

பொம்மலாட்டம், சேவையாட்டம், உறியடி, கொக்கலிக்கட்டை ஆட்டம், தப்பாட்டம், கழங்காட்டம், கூத்து வகைகள், பேயாட்டம், சாமியாட்டம், புலியாட்டம் சாட்டையடி ஆட்டம் போன்ற அரிய நாட்டுப்புறக் கலைகளைப் பற்றி அறிய விழைவோர்க்கு விருந்தாகும் நூல்.

நூல் : நாட்டுப்புற ஆட்டக் கலைகள்: அன்றும் இன்றும்
பதிப்பாசிரியர்: முனைவர் த. கனகசபை 
பக்கங்கள்: 652
விலை: 200

You might also like