தலைவர்களுக்கு மலர் மாலை, பண மாலை அணிவிப்பது வழக்கம்.
கடந்தாண்டு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பெண்கள் இலவசமாக பஸ்சில் பயணிக்க ‘சக்தி’ திட்டம் உட்பட ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. பஸ்சில் இலவசமாக பயணிக்கும் பெண்களுக்கு ‘ஜீரோ’ டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹாசனில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய முதல்வர் சித்தராமையா வந்தார்.
அப்போது அரசிகெரேயைச் சேர்ந்த முதலாம் ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவி ஜெயஸ்ரீ, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு ‘இலவச பஸ் டிக்கெட்’டை மாலையாக கோர்த்து அணிவித்தார்.
இலவச பஸ் டிக்கெட்டுகளால் ஆன மாலையை, முதல்வர் சித்தராமையாவுக்கு அணிவித்தார். இதை பார்த்த முதல்வரும் பூரிப்படைந்தார்.
தேர்தல் பிரச்சாரம் செய்த சித்தராமய்யாவுக்கு ‘டிக்கெட்‘ மாலை அணிவித்த அந்த மாணவி, ’’பஸ்களில் இலவசமாக பயணிக்க நீங்கள் அனுமதி அளித்துள்ளீர்கள் – இதனால் சட்டக் கல்லூரிக்குத் தினமும் பஸ்சில் இலவசமாக செல்கிறேன்” என முதலமைச்சரிடம் கூறினார்.
அதற்கு சித்தராமய்யா, ”இது வெறும் மாலை அல்ல – என் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு கிடைத்த அற்புதமான அடையாளம்” என தெரிவித்தார்.
– பி.எம்.எம்.