உலக அரங்கில் தமிழை மவுனமாக ஓங்கி ஒலிக்கச் செய்த ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா.
1. தமிழை வளர்க்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்க வழிவகுத்தவர்.
2. திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்க்க யுனெஸ்கோ மூலம் உதவியவர்.
3. தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம் போன்ற பல்வேறு பழமையான கோவில்களை பாரம்பரிய சின்னமாக மாற்றிக் காப்பாற்றியவர்.
4. யுனெஸ்கோ கூரியர் இதழை தமிழில் கொண்டு வந்தவர்.
5. தமிழ்த்துறை சார்ந்த விரிவுரையாளர்களுக்கு மற்ற துறையைப் போன்று கருதி சம்பள உயர்வுக்கு காரணமாக இருந்தவர்.
6. தமிழர்கள் பண்பாட்டு பெருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துச் சென்ற முன்னோடி.
இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவர் பெரும் கல்வியாளராக இருந்து யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்கச் செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.
நன்றி: முகநூல் பதிவு