வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு!

நூறு ஆண்டுக்கு முன்னர் இதே நாளில் (மார்ச் 30 – 1924) கேரளாவின் வைக்கம் நகரில் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தீண்டப்படாத மக்கள் நுழைவு போராட்டம், வைக்கம் சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் வைக்கம் போராட்டம் துவங்கியது.

அதில் தீவிரமாக பங்கேற்றுப் போராடி சிறைக்குச் சென்ற தந்தை பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டத்தை திருவிக வழங்கினார்.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு நாளான (மார்ச் 30 – 2024) இன்று, போராட்டத்தையும் போராளிகளையும் தந்தை பெரியாரையும் நினைவு கூறுவதற்கு நானும் என் நெருங்கிய தோழர். வழக்குரைஞர். மதுரை பாலுவும் கொச்சியில் இருந்து வைக்கம் சென்றடைந்தோம்.

வைக்கம் நூற்றாண்டை துவக்கி வைத்து இங்குள்ள நினைவகத்தை புதுப்பிக்க தமிழ் நாடு அரசின் மாண்புமிகு முதல்வர் ஆணையின்படி பராமரிப்பு வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக எந்த அரசியல் கட்சிகளும் எந்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்யாத போது – வைக்கம் நினைவகம் ஆரவாரமில்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் இருந்தது.

நூறாண்டுகள் கடந்த விட்ட வைக்கம் போராட்டம் (30.03.1924 – 30.03.2024) நிறைவு நாளை போராளிகளின் நினைவு நாளாக எண்ணி – வணக்கம் சொன்னோம் வைக்கத்திற்கு.

இந்திய வரலாற்றில் முதலாவது சத்தியாகிரக போராட்டம் இது தான் என்பதும், இந்தியாவில் நடைபெற்ற முதலாவது மனித உரிமைப் போராட்டமும் இது தான் என்பதும் நினைவில் நிறுத்த வேண்டியது.

வணக்கம் வைக்கம்.

பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,
வைக்கத்திலிருந்து.
30.03.2024.

#வைக்கம் #தந்தை_பெரியார் #வைக்கம்_வீரர் #வைக்கம்_போராட்டம் #Vaikkam_Porattam #Periyar #வைக்கம்_போராட்டம்_நிறைவு_நாள்

You might also like