வாக்காளப் பெருமக்களே…!

தேர்தல் பக்கங்கள்:

*
வாக்களிப்பது மக்களின் ஜனநாயக உரிமையென போதிக்கப்படுகிறது. அதைச் சொல்கிறவர்களே லாவகமாக விதிமுறைகளை மீறுகிறார்கள்.

வாக்களிப்பதையே கொடுக்கல் வாங்கலாக மாற்றுகிறார்கள். பொது வெளியை இலவசங்களுக்கான வெளியாக உருமாற்றுகிறார்கள்.

நேற்றையும், நாளையையும் மறக்கடித்து இன்றைய வெறுமையை மட்டுமே நினைவுறுத்துகிறார்கள்.

ஒவ்வொருவர் தலையைச் சுற்றிலும் கொசுக் கூட்டத்தைப் போல சூழ்ந்திருக்கின்றன நம் பெயரில் வாங்கப்பட்ட கடன்கள்.

சிலர் பிரச்சாரத்தை நம்புகிறார்கள். சிலர் சோதிடத்தை நம்புகிறார்கள். சிலர் சாமிகளின் உயரத்தை நம்புகிறார்கள். சிலர் நவீனப்பட்ட இயந்திரங்களை நம்புகிறார்கள். சிலர் நாம் கடந்துவந்த மன்னராட்சியைப் புதுப்பிக்கிறார்கள்.

தங்கள் கண்ணுக்கு முன்னால் நடக்கும் இவற்றை எல்லாம் கடந்து வாக்களிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள் வாக்காளப் பெருமக்கள்.

You might also like